திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்
அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்
சொல்
அறத்துப்பால்
வெகுளாமை
306.சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

தமிழ் விளக்கவுரை
மு.வரதராசன் (மு.வ.) :
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத்தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
கலைஞர் :
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
சாலமன் பாப்பையா :
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.
English Translation and Explanation
Translation :
Wrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred dear.
Explanation :
The fire of anger will burn up even the pleasant raft of friendship.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis

< முந்தைய குறள் அடுத்த குறள் >
தினம் ஒரு குறள் எதாவது ஒரு குறள்
    

பின்பு
தமிழ் விளக்கவுரைக்கு-வை கிளிக் செய்யவும் | Click for English Translation
துரித இணைப்புகள்


அறத்துப்பால்
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்
பொருட்பால்
அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல்
படையில் நட்பியல் குடியியல்  
காமத்துப்பால்
களவியல் கற்பியல்
எல்லா அதிகாரங்களும்
இணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த்
முத்து இணையம்