திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்
அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்
சொல்
பொருட்பால்
வினைத்தூய்மை
654.இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

தமிழ் விளக்கவுரை
மு.வரதராசன் (மு.வ.) :
அசைவற்ற தொளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர் :
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா :
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
English Translation and Explanation
Translation :
Though troubles press, no shameful deed they do,
Whose eyes the ever-during vision view.
Explanation :
Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis

< முந்தைய குறள் அடுத்த குறள் >
தினம் ஒரு குறள் எதாவது ஒரு குறள்
    

பின்பு
தமிழ் விளக்கவுரைக்கு-வை கிளிக் செய்யவும் | Click for English Translation
துரித இணைப்புகள்


அறத்துப்பால்
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்
பொருட்பால்
அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல்
படையில் நட்பியல் குடியியல்  
காமத்துப்பால்
களவியல் கற்பியல்
எல்லா அதிகாரங்களும்
இணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த்
முத்து இணையம்