திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்
அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்
சொல்
அறத்துப்பால்
இல்வாழ்க்கை
49.அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

தமிழ் விளக்கவுரை
மு.வரதராசன் (மு.வ.) :
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால்மேலும் நன்மையாகும்.
கலைஞர் :
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா :
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.
English Translation and Explanation
Translation :
The life domestic rightly bears true virtue's name;
That other too, if blameless found, due praise may claim.
Explanation :
The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis

< முந்தைய குறள் அடுத்த குறள் >
தினம் ஒரு குறள் எதாவது ஒரு குறள்
    

பின்பு
தமிழ் விளக்கவுரைக்கு-வை கிளிக் செய்யவும் | Click for English Translation
துரித இணைப்புகள்


அறத்துப்பால்
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்
பொருட்பால்
அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல்
படையில் நட்பியல் குடியியல்  
காமத்துப்பால்
களவியல் கற்பியல்
எல்லா அதிகாரங்களும்
இணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த்
முத்து இணையம்