திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்
அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்
சொல்
அறத்துப்பால்
ஊழ்
373.நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

தமிழ் விளக்கவுரை
மு.வரதராசன் (மு.வ.) :
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
கலைஞர் :
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
சாலமன் பாப்பையா :
பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)
English Translation and Explanation
Translation :
In subtle learning manifold though versed man be,
'The wisdom, truly his, will gain supremacy.
Explanation :
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis

< முந்தைய குறள் அடுத்த குறள் >
தினம் ஒரு குறள் எதாவது ஒரு குறள்
    

பின்பு
தமிழ் விளக்கவுரைக்கு-வை கிளிக் செய்யவும் | Click for English Translation
துரித இணைப்புகள்


அறத்துப்பால்
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்
பொருட்பால்
அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல்
படையில் நட்பியல் குடியியல்  
காமத்துப்பால்
களவியல் கற்பியல்
எல்லா அதிகாரங்களும்
இணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த்
முத்து இணையம்