திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்
அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால்
சொல்
அறத்துப்பால்
ஊழ்
371.ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

தமிழ் விளக்கவுரை
மு.வரதராசன் (மு.வ.) :
கைப்பொருள் அவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்ப்படும்.
கலைஞர் :
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.
சாலமன் பாப்பையா :
பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
English Translation and Explanation
Translation :
Wealth-giving fate power of unflinching effort brings;
From fate that takes away idle remissness springs.
Explanation :
Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis

< முந்தைய குறள் அடுத்த குறள் >
தினம் ஒரு குறள் எதாவது ஒரு குறள்
    

பின்பு
தமிழ் விளக்கவுரைக்கு-வை கிளிக் செய்யவும் | Click for English Translation
துரித இணைப்புகள்


அறத்துப்பால்
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்
பொருட்பால்
அரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல்
படையில் நட்பியல் குடியியல்  
காமத்துப்பால்
களவியல் கற்பியல்
எல்லா அதிகாரங்களும்
இணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த்
முத்து இணையம்